2025 ஒக்டோபர் 23, வியாழக்கிழமை

வன்முறையை தூண்டும் காணொளி ; திடீர் சுற்றி வளைப்பு

Janu   / 2025 ஒக்டோபர் 22 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

விசேட அதிரடிப் படையினரால் யாழ்ப்பாணம் முளவை சந்திக்கு அருகில் உள்ள வீடொன்று புதன்கிழமை (22) காலை திடீரென சுற்றிவளைக்கப்பட்டது

இளைஞர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில்  பிறந்த நாள் கொண்டாட்ட காணொளியொன்றை பதிவேற்றம் செய்தமை, சட்டவிரோத சொத்து குவிப்பு என்ற குற்றச்சாட்டுகளுக்கமைய குறித்த வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன் போது வீட்டில் எவரும் இல்லாத நிலையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், இருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .