2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

’வயல் நிலங்களில் உபஉணவுப் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளவும்’

Editorial   / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

யாழ்ப்பாணக் குடாநாட்டில், பெரும்போக நெற்செய்கைக்கான  அறுவடையை நிறைவு செய்த விவசாயிகள், தமது வயல்களில்  உபஉணவுப் பயிர்ச்செய்கையையை மேற்கொள்ள வேண்டுமென்று, யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த திணைக்களம், இம்முறை, போகத்தின்போது குறைந்தது 900 ஹெக்டெயர்  வயல் நிலப்பரப்புகளில், உபஉணவுப் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் உபஉணவுப் பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதற்கு ஒவ்வொரு போதனாசிரியர் பிரிவுகள் தோறும் இது தொடர்பாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவெனவும் கூறியது.

தற்போது, நெற்பயிர்கள் அறுவடை  செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளனவெனச் சுட்டிக்காட்டிய திணைக்களம்,
வயல்கள் ஈரத்தன்மையுடன் உள்ளனவெனவும், இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, விவசாயிகள் தமது வயல்களில் உபஉணவுப் பயிர்ச் செய்கையில் ஈடுபட முன்வர வேண்டுமெனவும் வலியுறுத்தியது.

இந்தப் பயிர்செய்கையை மேற்கொள்வதற்குத் தேவையான விதைகளை, மாவட்ட விவாசயத் திணைக்களத்தின் ஊடாகக் குறைந்த விலையில் விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாமெனவும், திணைக்களம் தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X