2025 மே 17, சனிக்கிழமை

வரட்சியால் 14,809 குடும்பங்கள் பாதிப்பு

Editorial   / 2019 மே 24 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்    

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், 14,809 குடும்பங்களைச் சேர்ந்த 49,381 பேர் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக,  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், 15  பிரதேச செயலகப் பிரிவுகளில்  எட்டு பிரதேச செயலகப் பிரிவுகளில்  இந்தப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.  இவர்களுக்கான குடிநீர் விநியோகத்தை மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் நிலையம் விநியோகித்து வருகிறது.

அந்த வகையில், நெடுந்தீவில் 1,031 குடும்பங்களும் வேலணையில் 2,798 குடும்பங்களும் புங்குடுதீவில் 2,422 குடும்பங்களும் காரைநகரில் 2,760 குடும்பங்களும் சண்டிலிப்பாயில்  1,041 குடும்பங்களும் சாவகச்சேரியில் 3,361 குடும்பங்களும் கரவெட்டியில் 336 குடும்பங்களும் மருதங்கேணியில் 1,060 குடும்பங்கும் வரட்சியால்  பாதிக்கப்பட்டுள்ளதாக, யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம்  அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .