2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

வரலாற்றின் முதல் தடவையாக செங்கோலுடன் நடைபெற்ற அமர்வு

Niroshini   / 2021 நவம்பர் 30 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த் 

வரலாற்றின் முதல் தடவையாக, யாழ். மாநகரசபை அமர்வு, செங்கோலுடன் மாநகர மேயர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது

மாநகர மேயர் வி. மணிவண்ணனின் வேண்டுகோளுக்கு அமைய, அண்மையில், குகபதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக, நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானம், யாழ்.மாநகர சபைக்கு செங்கோல் ஒன்றை வழங்கியது. 

நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 11ஆவது நிர்வாக அதிகாரி குமரேஷ்  சயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட  செங்கோலுடன், வரலாற்றில் முதல் தடவையாக, இன்று (30), மாநகர அமர்வு,  மேயர் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X