2025 மே 14, புதன்கிழமை

’வருடாந்த கொடுப்பனவை வழங்குவதற்கு அனுமதி’

Editorial   / 2020 மார்ச் 17 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

சாவகச்சேரி நகர சபையின் எல்லைக்குட்பட்ட சனசமூக நிலையங்களுக்கான  வருடாந்த கொடுப்பனவை வழங்குவதற்கு, உள்ளுராட்சி ஆணையாளரின் அனுமதி கிடைத்திருப்பதாக, சாவகச்சேரி  நகரசபைத் தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன் தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், சாவகச்சேரி நகரசபையினர் தமது வரவு - செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் பதிவிலுள்ள 23 சனசமூக நிலையங்களுக்கும், தலா பத்தாயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்வது வழமையெனவும் இருப்பினும், கடந்தாண்டு, சனசமூக நிலையங்களுக்கு ஒதுக்கிய நிதியை விடுவிப்பதற்கான அனுமதி கிடைப்பதில் இழுபறி நிலைமை காணப்பட்டு வந்ததெனவும் கூறினார்.

இது தொடர்பாக, நகர சபை உறுப்பினர்கள், சபையில் விவாதித்ததைத் தொடர்ந்து, நகரசபை நிர்வாகம் எடுத்த முயற்சியின் பலனாக, தற்போது கொடுப்பனவுக்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X