Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 டிசெம்பர் 15 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
2013ஆம் ஆண்டு தரவுகளின் பிரகாரம், நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் வறுமை கூடிய மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் பதிவாகியுள்ளது என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் 69ஆவது அமர்வு, நேற்றுப் புதன்கிழமை (14) இடம்பெற்றது. இதன்போது, 2017ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம், முதலமைச்சரால், சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,
“நாட்டின் மொத்த வேலைப்படையில், வட மாகாணமானது 4.3 சதவீதப் பங்களிப்பினைக் கொண்டிருக்கின்றது.
வடமாகாணத்தின் வறுமை நிலையினை நோக்கும் போது, 2013ஆம் ஆண்டின் தரவுகளின் பிரகாரம், நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் வறுமை கூடிய மாவட்டமாக, முல்லைத்தீவு மாவட்டம் அதாவது 28.8 சதவீத வறுமை குறிகாட்டியைப் பதிவு செய்துள்ளது.
மேலும் மன்னார் மாவட்டம் - 20.1 சதவீத வறுமை நிலையினையும் கிளிநொச்சி - 12.7 சதவீத வறுமை நிலையினையும், யாழ்ப்பாணம் - 8.3 சதவீத வறுமை நிலையினையும், வவுனியா - 3.4 சதவீத வறுமை நிலையினையும் பதிவு செய்துள்ளன.
எனவே, வட மாகாணத்தின் பல்வேறு துறைகளிலும் தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்கக்கூடிய முதலீடுகளை உருவாக்கி வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்வதும், சிறிய நடுத்தர தொழில் முயற்சிகளுக்கூடாக மக்களின் வருமானத்தினை அதிகரிக்கச்செய்வதும், 2017ஆம் ஆண்டு செலவுத் திட்டத்தினூடாக, அடையப்படவேண்டிய இலக்குகளாக உள்ளன.
வட மாகாணம், தனது உள்ளக வள வாய்ப்புக்கள் ஊடாக வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல், மக்களுக்கான வருமான மட்டத்தினை அதிகரிக்கச்செய்தல், கிராமிய பொருளாதாரங்களை அபிவிருத்தி செய்தல், மாகாண மட்டத்தில் உணவுப்பாதுகாப்பினை உறுதிப்படுத்தல், சிறிய நடுத்தர விவசாயிகள்.
26 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago
3 hours ago