2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வலிகாமம் வடக்கின் அபிவிருத்திக்கு ரூ.96 மில்லியன்

Menaka Mookandi   / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

வலிகாமம் வடக்கில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பிரதேசங்களில் நெல்சிப் திட்டத்தின் ஊடாக 96 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு வலிகாமம் வடக்கிலிருந்து வெளியேறிய குடும்பங்கள் நலன்புரி நிலையங்கள், உறவினர்கள் வீடுகள் மற்றும் வாடகை வீடுகளில் வசித்து வந்தனர். அவர்களின் காணிகள் இராணுவத்தினரால் உயர்பாதுகாப்பு வலயங்களாக ஆக்கப்பட்டன.

இந்நிலையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் படிப்படியாக இவர்களின் காணிகள் விடப்பட்டு மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டது.

விடுவிக்கப்பட்டு மக்கள் மீள்குடியேறிய பிரதேசங்கள் எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற பிரதேசங்களாக காணப்பட்டன. 25 வருடங்கள் மக்கள் வசிக்காத இந்த இடங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் காணப்பட்டது.

இந்நிலையில் 7 கிலோமீற்றர் நீளமான வீதிகளும், 2 பொதுக் கிணறுகளும் 71 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்படவுள்ளன. மேலும், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தலைமை அலுவலகம் 25 மில்லியன் ரூபாய் செலவில் நவீன முறையில் நிர்மாணிக்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X