Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜனவரி 06 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
காரைநகர் கடலில் மீன்பிடி வலைகளை சீர் செய்துக் கொண்டிருந்த மீனவருக்கு, திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டதன் காரணத்தினால், அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் காரைநகர், களபூமி பகுதியைச் சேர்ந்த தங்கவேலு மோதிலாலு (வயது 33) என்ற, திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீண்ட நேரமாக கடலுக்கு சென்ற கணவனை காணவில்லை என்று தெரிவித்து, அவருடைய மனைவி அவரை தேடி கடற்கரைக்குச் சென்றுள்ளார். இதன்போது, கடலில் மிதந்துக்கொண்டிருந்த சடலம் உறவினர்கள் உதவியுடன் யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
எனினும் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், மரண விசாரணையை யாழ். போதான வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
52 minute ago
57 minute ago
01 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
57 minute ago
01 Oct 2025