Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2016 மே 14 , மு.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் வலசைப் பறவைகள் தொடர்பிலான செயலமர்;வு வெள்ளிக்கிழமை (13) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இச்செயலமர்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (15) வரை இடம்பெறவுள்ளது. ஆண்டுதோறும் மே மாதம் இரண்டாவது வாரத்தின் இறுதி நாட்களில் சர்வதேச அளவில் உலக வலசைப் பறவைகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, வலசைப் பறவைகள் பற்றிய அறிவூட்டலை ஏற்படுத்தும் நோக்குடன் வடக்கு சுற்றாடல் அமைச்சு கல்வி அமைச்சுடன் இணைந்து மூன்று நாள் வதிவிடச் செயலமர்வு மற்றும் வெளிக்களப் பயிற்சியை ஒழுங்குசெய்துள்ளது.
இதில் வடக்கின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் தெரிவுசெய்யப்பட்ட 100 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
வளவாளர்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விலங்கியல்துறையைச் சேர்;ந்த கலாநிதி க.கஜபதி, கலாநிதி சி.அபிராமி, செல்வி க.கஜவதனி ஆகியோரும் தன்னார்வப் பறவையியல் ஆய்வாளர்;கள் க.அசோகன், பா.ராஜ்குமார்; ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்;.
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago