Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஒக்டோபர் 04 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊரெழு பகுதியில், நேற்றைய தினம் (03) இரவு, பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் ஒன்றில் இருவர் தலைக்கவசமின்றி பயணித்துள்ளனர்.
அவர்களை வழிமறித்த பொலிஸார், சாரதி அனுமதிப்பத்திரத்தை வாங்கி, அபராத பத்திரத்தை எழுத முற்பட்ட போது, அங்கு வந்த பிரதேச சபை உறுப்பினர், பொலிஸாருடன் முரண்பட்டார்.
அவரது நடவடிக்கை எல்லை மீறிச் சென்றதனால் பொலிஸ் உத்தியோகத்தர் வானத்தை நோக்கி இரண்டு தடவை சூடு நடத்தி எச்சரித்தனர்.
அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவரையும், தமது கடமைக்கு இடையூறு விளைவித்தனர் எனும் குற்றச்சாட்டில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் தன்னை ஈபிடிபி கட்சி என அறிமுகப்படுத்தி பல தடவைகள் பொலிஸாருடன் முரண்பட்டு, கடமைக்கு இடையூறு விளைவிப்பவர் என்றும் பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .