2025 மே 02, வெள்ளிக்கிழமை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளால் போராட்டங்கள்

Niroshini   / 2020 டிசெம்பர் 30 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன், எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன், எஸ்.றொசேரியன் லெம்பேட், சுப்பிரமணியம் பாஸ்கரன்,மு.தமிழ்ச்செல்வன்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், வடக்கில் வெவ்வேறு 3 பகுதிகளில், இன்று (30) காலை போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதற்கமைய, யாழ். மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், நல்லூர் கந்தன் கோவில் பின்பக்க வீதியில் அமைந்துள்ள நல்லை ஆதினம் முன்பாக,  காலை 9 மணிக்கும் வவுனியா மாவட்டத்தில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், வவுனியா நகரத்திலும், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அத்துடன், மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தால், மன்னார் நகர பஸ் தரிப்பிடத்துக்கு முன்னால், காலை 10.30 மணயளவில், கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும், கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால்,இன்று காலை 11.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க அலுவலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .