Editorial / 2018 மார்ச் 28 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.ஜெகநாதன்
யாழ்ப்பாணம் வலிமேற்கு பிரதேச சபையின் ஆட்சியினையும் தமிழ் தேசிய கூட்டமைப்பானது 19 உறுப்பினர்களது ஆதரவோடு தன்வசப்படுத்தியுள்ளது.
வலிமேற்கு பிரதேச சபையின் தவிசாளர் உபதவிசாளரைத் தெரிவு செய்யும் நிகழ்வானது, இன்று (28) வடக்கு மாகாண உள்ளுராட்சி சபைகள் ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலமையில் இடம்பெற்றது.
இதன்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் தருமலிங்கம் நடகஜேந்திரனின் பெயரும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்பில் தேவராஜா ரஜீவனின் பெயரும் பிரேரிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, பகிரங்க வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இவ் வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது 19 வாக்குகளை பெற்று ஆட்சியை கைப்பற்றியிருந்ததுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி 06 வாக்குகளை பெற்றிருந்தது.
இதன்படி, தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட தர்மலிங்கம் நடகஜேந்திரன் தவிசாளராகவும் வேலையா சச்சிதானந்தம் உபதவிசாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
இதேவேளை, இப்பிரதேச சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது, 09 ஆசனங்களையும், ஈ.பி.டி.பி 04 ஆசனங்களையும், ஐக்கிய தேசிய கட்சி 03 ஆசனங்களையும், சிறிலங்கா சுதந்திர கட்சி 01 ஆசனத்தையும், சுயேட்சை குழுவானது 02 ஆசனங்களையும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி 06 ஆசனங்களையும் பெற்றிருந்த நிலையில், 19 உறுப்பினர்களின் ஆதரவோடு தமிழ் தேசிய கூட்டமைப்பானது ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
12 minute ago
30 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
30 minute ago
48 minute ago
2 hours ago