2025 ஜூலை 30, புதன்கிழமை

வல்லையில் துப்பாக்கியின் பாகங்கள் மீட்பு

Editorial   / 2017 ஜூலை 17 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

- செல்வநாயகம் கபிலன், கே.மகா

பருத்தித்துறை, யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள, வல்லை பாலத்தின் கீழ், துப்பாக்கியின் பாகங்கள், நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

பாலத்தின் கீழ் இறால் பிடியில் ஈடுபட்ட உள்ளூர் மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தற்போது நிலவும் வரட்சி காரணமாக கடல் நீரேரியில் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது. இதுவரை காலமும் நீருக்குள் புதையுண்டிருந்த நிலையில் துப்பாக்கியின் பாகங்கள் வெளியில் தென்பட்டுள்ளது.

கடல் நீரில் இருந்தமை காரணமாக, மிகவும் உருக்குலைந்த நிலையிலேயே, துப்பாக்கியின் பாகங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .