2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வளர்த்த மாடு தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

Editorial   / 2017 ஓகஸ்ட் 20 , பி.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வேலணை மேற்கு 5ஆம் வட்டாரப் பகுதியில், வளர்ப்பு மாடு நெஞ்சில் பாய்ந்ததில், குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

முனியாண்டி பொன்னையா (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த நபர், நாம்பன் மாடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். வழமைபோன்று, மாட்டுக்குத் தண்ணீர் வைக்கச் சென்ற வேளை, மாட்டைப் பிடித்துக் கட்டுவதற்கு முயன்றபோது, மாடு அவரைத் தாக்கியுள்ளது. 

இதில் படுகாயங்களுக்கு உள்ளான நபர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி நேற்று (19) இரவு உயிரிழந்துள்ளார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .