2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வளலாய்க்கு மின்சாரம்

Menaka Mookandi   / 2016 ஜனவரி 03 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கடந்த வருடம் மார்ச் மாதம் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட வளலாய் வடக்கு பகுதியில் மீளக்குடியமர்ந்த குடும்பங்களுக்கு, தற்போது மின்சார வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பிரதேச செயலக தகவல்கள் தெரிவித்தன.

கோப்பாய் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வளலாய் பகுதியின் 400 ஏக்கர் நிலப்பரப்பு 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த நிலையில் கடந்த மார்ச் மாதம், இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டிருந்தது.

விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து 297 குடும்பங்கள் மீள்குடியேற விருப்பம் தெரிவித்து தமது பதிவுகளை மேற்கொண்டிருந்தனர். எனினும், தற்போது 64 குடும்பங்களே நிரந்தரமாக அப்பகுதியில் மீள்குடியமர்ந்;துள்ளனர். இவர்களில் 48 குடும்பங்களுக்கு தற்காலிக வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதற்கட்டமாக 33 குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கி வைக்கப்பட்டுள்ள அதேவேளை, மிகுதி ஏனைய குடும்பங்களுக்கு இம்மாத இறுதியில் மின் இணைப்புக்கள் வழங்க பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளதாக செயலக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X