Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
எம். றொசாந்த் / 2018 ஒக்டோபர் 19 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளத்திலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட நபரையும் அவருடைய சகாவையும் எதிர்வரும் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு இருவரும் யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம் இன்று (19) உத்தரவிட்டார்.
குறித்த இருவரையும் கோப்பாய் பொலிஸார் கைது செய்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர்.
சந்தேகநபர்கள் இருவரும் போதைப்பொருள் பாவனையால் நண்பர்களாகினர். போதைப்பொருள் பாவனைக்காக வழிப்பறியில் ஈடுப்பட்டனர் என பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம், கொக்குவில், கோண்டாவில் பகுதிகளில் அண்மைய நாள்களில் வழிப்பறி கொள்ளைகள் இடம்பெற்றன. வீதியால் சென்ற பெண்களிடம் நகைகள் மற்றும் கைப்பைகள் பறிக்கப்பட்டன.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. அவற்றின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சந்தேகநபர்கள் இருவரை நேற்று (18) வியாழக்கிழமை கைது செய்தனர்.
அத்துடன் கொள்ளையிடப்பட்ட நகைகளை சந்தேகநபர்கள் நகைக் கடையொன்றில் விற்பனை செய்துள்ளனர். அவை உருக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டன. பெண் ஒருவரின் கைப்பையும் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டது.
சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து வழக்கை விசாரணை செய்த பதில் நீதிவான், சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .