Freelancer / 2022 ஜூன் 20 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். தில்லைநாதன்
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலி வல்லைப்பகுதியில், வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் பொது மக்களினால் பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இறைச்சி வியாபாரி ஒருவரின் 3 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட போது, பொது மக்களால் இவர்கள் நையப்புடைக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில், தப்பிச்சென்ற மற்றுமொரு இளைஞன் நாவல் காட்டு பகுதியில் உள்ள கோயில் கேணியில் கால் கழுவிக் கொண்டிருந்த போது சிக்கியுள்ளார்.
குறித்த இளைஞனிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் கைப்பற்றப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் இளைஞர்கள் இருவரையும் அழைத்துச் சென்றதுடன், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். (R)
8 hours ago
8 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
17 Dec 2025