2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

வவுனியா சிறைச்சாலைக்கு சிவசக்தி ஆனந்தன் விஜயம்

க. அகரன்   / 2018 மே 16 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்வதுக்காக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.தியகராஜா ஆகியோர் இன்று (16) நேரடியாக சென்று சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளனர்.

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் கைதிகளுக்கு எதிராக பல்வேறு அநீதிகள் இடம்பெறுவதாக அண்மையில் கைதி ஒருவர் வவுனியா நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனையடுத்து கைதிகளுக்கு எதிராக இடம்பெறும் அநீதிகளை கண்டித்தும் சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் பாவனை நடைபெறுவதாகவும் கூறி சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து சில கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் சிறைக்கைதிகள் நேற்று (15) உணவுதவிர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

இவ்விடயங்கள் தொடர்பாக ஆராயும் பொருட்டு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் எம்.தியாகராஜா ஆகியோர் விளக்கமறியல் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர்.

இந்நிலையில் வவுனியா சிறைச்சாலைக்குள் போதைபொருள் பாவனையுள்ளதாக கைதிகள் தெரிவித்தாக சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இதேவேளை “சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் அடிப்படையில் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் 55 கைதிகளை மாத்திரமே  தங்க வைக்க முடியும். இந்நிலையில் சுமார் 258 பேரை தங்க வைக்கின்ற நிலைமை  காரணமாக இட வசதியின்மை   ஏற்பட்டமையால் சிறைக்கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது” எனவும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .