க. அகரன் / 2018 மே 04 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா சிறைச்சாலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளும் இணைந்து ஏனைய கைதிகளுக்கு புரியும் அநீதிகள் தொடர்பாக, வவுனியா நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக வருகை தந்த விளக்கமறியல் கைதி ஒருவர் இன்று (04) பதில் நீதவானிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக வவுனியா சிறைச்சாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட விளக்கமறியலில் உள்ள கைதி ஒருவர், தனது கைகளை உயர்த்தி நீதவானிடம் சில விடயங்களை தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதன் போது கடமையில் இருந்த பதில் நீதவான் கைதிக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தார்.
இதன்போது கைதி, வவுனியா சிறைச்சாலையில் கைதிகளுக்கு பல்வேறான அநீதிகள் இடம்பெறுவதாகவும், கைதிகள் நல்ல இடத்தில் உறங்குவதற்கு சுமார் 3 ஆயிரம் ரூபாய் வரை பெறப்படுவதாகவும் அப்பணம் வழங்கப்படா விட்டால் மலசல கூட பகுதியிலேயே தங்கவிடப்படுவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், சிறைச்சாலைக்குள் புகையிலை போதைப்பொருள் பாவனையும் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார். இவ்வாறான செயற்பாடுகளை சிறைச்சாலை உத்தியோகத்தர்களும், நீண்ட நாள் கைதிகளாக இருப்பவர்களும் இணைந்தே மேற்கொண்டு வருவதாகவும்; தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து அனைத்து சட்டத்தரணிகளும் எழுந்து, குறித்த கைதி சுட்டிக்காட்டும் பிரச்சனை சிறைச்சாலையில் இடம்பெறுவதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், பதில் நீதவான் வவுனியா சிறைச்சாலை பொறுப்பதிகாரியை நீதிமன்றத்துக்கு அழைத்து, குறித்த கைதி தெரிவித்த கருத்தினை சுட்டிக்காட்டி இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.
2 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
9 hours ago