Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
க. அகரன் / 2018 மே 15 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா சிறைச்சாலையில் உள்ள கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றுவதுக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கைதிகள் இன்று (15) சிறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் வவுனியா சிறைச்சாலையில் கைதிகளுக்கு அநீதி இடம்பெறுவதாகவும் போதைவஸ்து பாவனைகளும் அதிகளவில் இடம்பெறுவதாகவும் தெரிவித்து வவுனியா சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனை அடுத்து வவுனியா சிறைச்சாலைக்குள் போதைவஸ்து பாவனை இருப்பதாகவும் சட்ட விரோதமாக சிறைச்சாலைக்குள் போதைவஸ்து வருவதாகவும் தெரிவித்து கைதி ஒருவரை நேற்று (14) சிறைக்காவலர்கள் தாக்கியமையால் அக்கைதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதன் தொடர்ச்சியாக சிறைக்கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றுவதுக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட;டதையடுத்து, இன்று (15) சிறைக்கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025