2025 மே 19, திங்கட்கிழமை

வவுனியா பழைய பஸ் நிலையத்தில் பஸ்கள் தரித்து செல்லுதல் தொடர்பிலான கலந்துரையாடல்

எம். றொசாந்த்   / 2018 டிசெம்பர் 06 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா பழைய பஸ் நிலையத்தில் பஸ்கள் தரித்து செல்ல வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பான விசேட கலந்துரையாடல் ஆளுநர் அலுவலகத்தில் இன்று (06) நடைபெற்றது.

இலங்கை போக்குவரத்துச்சபை, போக்குவரத்து அதிகாரசபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர், மாகாண போக்குவரத்து ஆணையாளர், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர்,  வவுனியா மேலதிக மாவட்டச் செயலர்,  வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி, வவுனியா மற்றும் வவுனியா வர்த்தசங்கம்,  தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம், இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தன.

இதில், மூன்று முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன

தூர பயணம் செய்யும் பஸ்கள் தரித்து செல்வதற்கு தனியான பஸ் தரிப்பிடமும் உள்ளுர் சேவையில் ஈடுபடும் பஸ்கள் தரித்து செல்வதற்கு தனியான பஸ் தரிப்பிடமும் பிரதான வீதியில் பழைய பஸ் நிலையத்துக்கு அண்மையாக ஏற்படுத்தப்பட வேண்டும்.

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைகளுக்கான நேரசூசி சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதனை கண்காணிப்பதுக்கு கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபட வேண்டும்.

அனைத்து பஸ்களும் மூன்று நிமிடங்கள் பழைய பஸ் நிலையத்திற்கு அருகில் பிரதான வீதியில் தரித்து பயணிகளை ஏற்றிச்செல்ல வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

ஆகிய 3 தீர்மானங்களையும் நடைமுறைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணித்த ஆளுநர் பழைய பஸ் நிலையம் தொடர்பிலான விடயம் நீதிமன்றத்தில் விசாரணை இடம்பெற்று வருவதால், அதன் தீர்ப்பின் பின்னராக அது தொடர்பில் முடிவுகளை எடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X