Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
ரொமேஷ் மதுஷங்க / 2018 ஏப்ரல் 30 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில், அண்மையில் பொதுச்சுகாதாரப் பரிசோகர்களால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 32 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டதுடன், 103 பேருக்கு கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த 32 வர்த்தக நிலையங்களுள் 19 ஹோட்டல்கள், 6 சில்லறை வர்த்தக நிலையங்கள், 6 மருந்தகங்கள், 3 பல்பொருள் அங்காடிகள் என்பன உள்ளடங்குகின்றன என, வவுனியா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எஸ்.லவன் தெரிவித்தார்.
பொதுமக்களின் சுகாதாரத்துக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில், உணவுப் பொருட்களை தயாரித்தல், காலாவதியான உணவுப் பொருட்களை விற்றல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழேயே, குறித்த 32 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த 32 வர்த்தக நிலையங்களில், ஒரு வர்த்தக நிலையத்துக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன எனத் தெரிவித்த வைத்திய அதிகாரி, உயர்மட்ட அதிகாரிகளின் அறிவுரைக்கமைய, குறித்த வர்த்தக நிலையம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளதெனவும் குறிப்பிட்டார்.
அத்துடன், கடந்த 5 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட குறித்த சுற்றிவளைப்பின் போது, உணவுப் பொருட்களைக் களஞ்சியப்படுத்தல், திறந்த இடத்தில் உணவுகளைச் சேமித்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ், 103 வர்த்தகர்களுக்குக் கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இனிவரும் காலங்களில் முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புகளின் போதும், இந்தச் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago