2025 மே 01, வியாழக்கிழமை

வவுனியாவில் பிள்ளையார் சிலை மாயம்

Editorial   / 2022 ஜனவரி 24 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் பிள்ளையார் சிலையொன்று காணாமல் போயுள்ளது.

வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் உள்ள இலுப்பை மரத்தின் கீழ் சிறிய கூடாரம் அமைக்கப்பட்டு, பிள்ளையார் சிலை வைத்து நீண்டகாலமாக வழிபடப்பட்டு வந்தது. 

இலுப்பையடிப் பகுதி வர்த்தகர்கள், ஓட்டோ சாரதிகள், அப்பகுதியால் பயணத்தில் ஈடுபடும் மக்கள் எனப் பலராலும் வழிபடப்பட்டு வந்த பிள்ளையார் சிலையே இவ்வாறு காணாமல் போயுள்ளது.

இனந்தெரியாதநபர்கள், குறித்த சிலையை அங்கிருந்து அகற்றியுள்ளதுடன், சிலை இருந்த இடம் தற்போது வெறுமையாகக் காட்சியளிக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .