Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 05 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
பாடசாலை சேவைகள், பயணிகள் சேவைகளின் போது கட்டண அறவீடுகளில் ஈடுபடும் அனைத்து வாகன உரிமையாளர்களும், தங்களது வாகனங்களைப் பதிவுசெய்யமாறு, வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவர் க.செவ்வேல் தெரிவித்தார்.
இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், வடக்கு மாகாணத்தில், போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள வாகன உரிமையாளர்கள், ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்பாக வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையில் பதிவு செய்ய வேண்டுமெனவும் கூறினார்.
இப்பதிவுகளை மேற்கொள்வதற்கான விண்ணப்பப் படிவங்களை, அதிகார சபையின் தலைமை அலுவலகத்திலோ அல்லது அதன் கிளைகளிலோ அல்லது வடக்கு மாகாண சபையின் இணையத்தளத்திலோ பெற்றுக் கொள்ளமுடியுமெனவும், அவர் கூறினார்.
அத்துடன், யாழ்ப்பாணம் - 0212215966, மன்னார் - 0773124498, முல்லைத்தீவு - 0212290334, வவுனியா - 0776016161, கிளிநொச்சி - 0212284920 ஆகிய மாவட்டங்களில் உள்ள கிளைகளில் மேற்குறித்த தொலைபேசி இலங்களுடன் தொடர்பு கொண்டு, விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago