2025 மே 13, செவ்வாய்க்கிழமை

’வாக்குகளைச் சூரையாட மில்லியன் கணக்கில் செலவு’

Editorial   / 2020 ஜூன் 28 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

அரசாங்கத்தைச் சார்ந்த கட்சிகள் சில, தமிழ் மக்களின் வாக்குகளைச் சூரையாடுவதற்காக,  பல மில்லியன்களைச் செலவு செய்கின்றனவென, ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

யாழ்ப்பாணம் - கட்டப்பிராயில் உள்ள அவருடைய வீட்டில், இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், இப்போது தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறதெனவும் ஒரு பக்கத்தில் அங்கஜன் இராமநாதன், என்ன விலை கொடுத்தேனும் தான் வெல்ல வேண்டும் என்பதற்காக பல மில்லியன்களைச் செலவு செய்துகொண்டிருக்கின்றாரெனவும் கூறினார்.


அரசாங்கம் தாங்கள் 1 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பைப் பெறுக்கொடுப்பதாகக் கூறினாலும் கூட, அவ்வளவுப் பேருக்கு வேலைவாய்ப்பைப் பெறுக்கொடுப்பதற்கான நிதி ஆதாரம் அரசாங்கத்திடம் இருக்கின்றதா எனவும், அவர் கேள்வியெழுப்பினார்.

அத்துடன், தங்கள் உரிமைகளுக்காகப் போராடக்கூடிய சூழலை தமிழர்கள் தான்  உருவாக்கிக்கொள்ள வேண்டுமெனவும், அது தவிர்க்க முடியாத ஒரு விடயமாக இருக்கிறதெனவும், சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X