2025 ஜூலை 07, திங்கட்கிழமை

வாள்களுடன் 4 இளைஞர் கைது

Editorial   / 2017 ஒக்டோபர் 31 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் ஏ9 வீதியின் மடத்தடிப் பகுதியில், வாள்களுடன் நடமாடிய 4 இளைஞர், நேற்று  (30) இரவு, யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் பொலிஸாரால், அந்தப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது, சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய குறித்த இளைஞர்களை விசாரணை செய்த போது, அவர்களின் உடைமையிலிருந்து வாள்கள் மீட்கப்பட்டன.

குறித்த நால்வரும் யாழ். மடத்தடி, இராசாவின் தோட்டம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என, பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .