2025 மே 03, சனிக்கிழமை

வாள்களுடன் ஒருவர் கைது

Niroshini   / 2021 செப்டெம்பர் 29 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

அச்செழு பகுதியில், இரண்டு வாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட நபர், அதே பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹெரோய்ன் விற்பனை செய்வது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், குறித்த வீட்டில் சோதனை மேற்கொண்டபோது இரண்டு வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்  சான்று பொருள்களுடன் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X