2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

வாள்கள் மற்றும் கசிப்புடன் ஒருவர் கைது

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 19 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் - ஆணைக்கோட்டை பகுதியில் கசிப்பு, கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் 03 வாள்கள் என்பவற்றுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஆணைக்கோட்டை பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு உற்பத்தியில் நபர் ஒருவர் ஈடுபட்டு வருவதாக யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசியத் தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த புலனாய்வுப் பிரிவினர் குறித்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தினர்.

அதன்போது அங்கிருந்து 08 லீட்டர் கசிப்பு, கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், உபகரணங்கள், 50 லீட்டர் கோடா மற்றும் 3 வாள்கள் என்பவற்றை மீட்டதுடன், அங்கிருந்த 38 வயதுடைய சந்தேகநபரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரையும் மீட்கப்பட்ட சான்று பொருட்களையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து, சந்தேகநபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X