2025 ஜூலை 19, சனிக்கிழமை

வாள்வெட்டில் நால்வர் காயம்

Niroshini   / 2021 ஒக்டோபர் 03 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-. அகரன்

வவுனியா - கோவில்குளம் பகுதியில், இளைஞர் குழு ஒன்று, வீதியால் செல்பவர்களை வழிமறித்து வாள் மற்றும் கோடரிகளால் தாக்கியதில், நால்வர் காயமடைந்துள்ளனர்.  

மதுபோதையில் நின்றிருந்த குறித்த நபர்கள், வீதியால் செல்பவர்களை தாக்கியதுடன்,  வீடுகள் சிலவற்றுக்குள் புகுந்து உறங்கிக் கொண்டிருந்தவர்களையும் தாக்கியுள்ளனர்.  

இதனால் பெண் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில், அவர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனுக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற அவர், நிலைமை தொடர்பாக ஆராய்ந்ததுடன், தாக்குதலை மேற்கொண்டவர்களை கைதுசெய்யுமாறு, பொலிஸாருக்கு பணித்தார்.

பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X