2025 மே 02, வெள்ளிக்கிழமை

வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த நால்வருக்கு விளக்கமறியல்

Niroshini   / 2021 டிசெம்பர் 14 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

சுன்னாகம் - புதுமடம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்களையும், 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு, மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான், இன்று(14) உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 11ஆம் திகதியன்று, இரண்டு வாள்வெட்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற தர்க்கம் வாள்வெட்டில் முடிவடைந்தது.

இந்த சம்பவத்தில், இளைஞன் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

சம்பவம் தொடர்பில், விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாகம் பொலிஸார், சந்தேக நபர்கள் நால்வரை கைதுசெய்தனர்.

 

மேலும், 11 சந்தேக நபர்களை தேடி வலை வீசப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .