2025 மே 14, புதன்கிழமை

‘வாள்வெட்டுக்குழுக்களை சட்டத்தரணிகள் புறக்கணிக்க வேண்டும்’

Editorial   / 2018 மே 30 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

- டி.விஜிதா

“வாள்வெட்டுக் குழுக்களுக்காக சட்டத்தரணிகள் நீதிமன்றங்களில் ஆஜராகாது புறக்கணிக்க வேண்டும்” என வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா சட்டத்தரணிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிராந்திய பத்திரிகையின் பிரதேச செய்தியாளரும் பத்திரிகை விநியோகஸ்தருமான செ.இராஜேந்திரன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக்கண்டித்து இன்று (30)  கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சட்டத்தரணிகள், வாள்வெட்டுக் குழுக்களுக்காக நீதிமன்றங்களில் ஆஜராகாது புறக்கணிக்க வேண்டும். சட்டத்தரணிகள் அனைவரும்  வாள்வெட்டுக் குழுக்களின் வழக்குகளில் ஆஜராகமாட்டோம் என தீர்மானித்தால், வாள்வெட்டுக் குழுக்கள் சிறைச்சாலைகளில் இருந்து வெளியே வர முடியாது.

நாங்கள் அரசையும் மற்றவர்களையும் குறை கூறுவதை விடுத்து, எங்களை நாங்கள் திருத்திக்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .