2025 மே 19, திங்கட்கிழமை

வாள்வெட்டுடன் தொடர்புடைய மூவர் கைது

எம். றொசாந்த்   / 2019 ஜனவரி 28 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தைப்பொங்கல் தினத்தன்று இருவர் மீது வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 2 வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று (27) தெரிவித்தனர்.

மானிப்பாய் கட்டுடை மற்றும் ஓட்டுமடம் பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தைப்பொங்கல் தினமான கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவிலடியில் இளைஞர்கள் இருவர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டது. இச்சம்பவத்தில் இளைஞர் ஒருவரின் கைவிரல் துண்டாடப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் மூன்று இளைஞர்கள் யாழ்ப்பாணம் சிறப்புப் பொலிஸ் பிரிவினரால் நேற்று (27) கைது செய்யப்பட்டனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படுவார்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X