Editorial / 2020 மே 25 , பி.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
ஆம்பன் சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள வாழைச் செய்கையாளர்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்க வேண்டுமென, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில், அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சூறாவளியின் தாக்கமானது அவர்களுக்கு மேலும் பேரிடியாக அமைந்துள்ளதாகவும் இதனால் அவர்களது வாழ்வாதாரம் முற்றிலும் தடைப்பட்டுள்ளனவெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழைச் செய்கையையே, கைவிட்டுவிடலாமோ என்ற முடிவுக்கு வந்துள்ளனரெனவும், சுரேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, பாதிக்கப்பட்டுள்ள வாழைச் செய்கையாளர்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்க வேண்டுமெனவும், அவர் வலியுறுத்தியுள்ளார்.
2 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago