Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஜூலை 01 , பி.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அனைத்துப் பிரதேசங்களிலும் சிறப்பு அதிரடிப் படையினர், இராணுவத்தினரின் உதவியுடன், விசேட பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகே அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், பொலிஸ் காவலரங்களை அதிகரிக்குமாறு, சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும், அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், அண்மைய நாள்களாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகேயிடம் வினவிய போதே, இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் சிறப்பு விசாரணைகளை முன்னெடுக்கப்படுகின்றன என்றும் வன்முறையில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறினார்.
அத்துடன், அனைத்துப் பிரதேசங்களிலும், சிறப்பு அதிரடிப் படையினர், இராணுவத்தினரின் உதவியுடன், சிறப்பு பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பொலிஸ் காவலரண்களை அதிகரிக்குமாறும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்குப் பணித்துள்ளேன் என்று, பிரியந்த லியனகே தெரிவித்தார்.
மேலும், "சில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவை தொடர்பில் விசாரணைகளை இடம்பெறுகின்றன.
"பொதுமகன் ஒருவர் தனது முறைப்பாட்டை ஏற்க பொலிஸ் நிலையத்தில் மறுப்பு தெரிவிக்கப்பட்டமை தொடர்பில் எனது வட்ஸ்அப் இலக்கத்துக்கு தகவல் அனுப்பியிருந்தார். அவரது முறைப்பாட்டை ஏற்க மறுத்தமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன. அத்துடன், முறைப்பாட்டாளர்கள் பலரது முறைப்பாடுகள் தேங்கிக் கிடைக்கின்றன. அவை தொடர்பில் எனது கண்காணிப்பின் கீழ் துரித விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
"எனவே, பொதுமக்கள் வன்முறைச் சம்பவங்கள், பொலிஸ் அலுவலகர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் எனது 071-8592200 என்ற வட்ஸ்அப் எண்ணுக்கு தகவல்களை வழங்கினால் உடனடி நடவடிக்கைக்கு அறிவுறுத்தல் வழங்குவேன்” என்றும், யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகே தெரிவித்தார்.
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago