2025 மே 14, புதன்கிழமை

விஞ்ஞானப் போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரல்

Editorial   / 2020 ஜனவரி 21 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

தமிழ் மாணவர்களின் விஞ்ஞான அறிவை மேம்படுத்தும் நோக்குடன், யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தால் வருடாந்தம் நடத்தப்பட்டு வரும் வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான விஞ்ஞானப் போட்டிகள், இவ்வருடமும் நடத்தப்படவுள்ளன.

இங்கிலாந்தைச் சேர்ந்த இரத்தினம் அமைப்பகத்தின் அனுசரணை நடைபெறவுள்ள இந்தப் போட்டி, பெப்ரவரி மாத பிற்பகுதியில் நடைபெறும் என்றும் இதற்கான விண்ணப்பத் திகதி, ஜனவரி மாதம் 30ஆம் திகதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டிகளுக்கான விண்ணப்பப்படிவங்கள், தபால் மூலம் பாடசாலைகளுக்கு அனுப்ப வைக்கப்பட்டுள்ளன என்றும் விண்ணப்பப்படிவங்கள் கிடைக்கப்பெறாத பாடசாலைகள், உதவி பொதுச் செயலாளர், யாழ்ப்பாண விஞ்ஞான சங்கம், இலக்கம் 84, கல்லூரி வீதி, நீராவியடி, யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு விஜயம் செய்தோ தொடர்பை ஏற்படுத்தியோ, பெற்றுக்கொள்ள முடியும் என, விஞ்ஞான சங்கத்தினர் அறிவித்துள்ளார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .