2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

டுபாய் பாதாள உலக குழுவால் திலீப பீரிஸூக்கு கொலை மிரட்டல்

Freelancer   / 2025 ஓகஸ்ட் 26 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுபாயில் மறைந்திருக்கும் திட்டமிட்ட குற்றவாளிகள் குழுவினால், மேலதிக மன்றாடியார் மற்றும் ஜனாதிபதி வழக்கறிஞர் திலீப பீரிஸின் உயிருக்கு ஆபத்து விளைவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து அவரது பாதுகாப்புக்காக ஒரு சிறப்பு பொலிஸ் குழு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த கொலை சதி தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திலீப பீரிஸின் வீட்டையும் அவர் பயணிக்கும் போது பாதுகாப்பதற்காக இந்த சிறப்பு பொலிஸ் குழு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X