2025 ஜூலை 23, புதன்கிழமை

‘விடுதலையே நோக்கம்’

Editorial   / 2017 ஓகஸ்ட் 07 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

“பதவி, பட்டங்களை நான் ஒரு போதும் விரும்பியதில்லை. தமிழினத்தின் விடுதலையே எமக்கு வேண்டும். அந்த விடுதலைக்காக என்னை அர்ப்பணித்துச் செயற்படுகிறேன்” என்று, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

13ஆவது சர்வதேச மாநாட்டின் இரண்டாம் நிகழ்வு, யாழ். டில்கோ விருந்தினர் விடுதியில், நேற்று (06) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  “நாம் பண்பாடுள்ளவர்களாகவும், நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ வேண்டும் என்பதற்காகவே, பல இலட்சக்கணக்கான உயிர்களை எமது இனம் பறிகொடுத்தது. இதற்காகத்தான் இன்றும் போராடிக் கொண்டிருக்கிறோம். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்ள வேண்டும். 

“எமது இனத்துக்காக, எமது வாழ்வு பேராட்டமாகவே காணப்படுகிறது. அதாவது போராட்டப் பாதையில் காலடி எடுத்து வைத்தவர்கள், என்னுடைய வாழ்வு முழுவதும் போராட்டம் தான். அத்தகைய அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறோம்” என்றார். 

இதேவேளை, “தென்னிலங்கையிலுள்ள தீவிரவாத போக்குடைய சக்திகள், தமிழரசுக் கட்சியைத் தடை செய்ய வேண்டும் என்று வழக்குப் போட்டார்கள். ஆனால், அதில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். தமிழரசுக் கட்சி, சமஷ்டிக் கோரிக்கையை வலியுறுத்தி வருகின்ற போது சமஷ்டி என்றால் பிரிவு, நாட்டைப் பிரித்துவிடும் என மூடத்தனமாக, தெற்கிலுள்ள தீவிரப் போக்குடையவர்கள் கருதுகின்றனர். அதுவே எமக்கு இப்பொழுது பல வழிகளிலும் தடையாக இருக்கிறது. இருந்தும் சமஷ்டி நாட்டைப் பிரித்து விடாது என்று, உயர் நீதிமன்றம், நல்லதொரு தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆகவே, இதைப் பயன்படுத்திக் கொண்டு, நாம் எமது கொள்கையின் அடிப்படையில் தொடர்ந்தும் பயணிப்போம்” எனவும் தெரிவித்தார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .