2025 மே 15, வியாழக்கிழமை

விடுதிக்குள் தாக்குதல்; ஒருவர் படுகாயம்

Editorial   / 2020 ஜனவரி 08 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் - பண்ணையில் அமைந்துள்ள உணவு விடுதியொன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத குழுவொன்று, அங்கு மேற்கொண்ட தாக்குதலில் உணவகப் பணியாளர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம், நேற்று (07) இரவு 11.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மூடப்பட்டிருந்த விடுதியை உடைத்துச் சென்று, பணப்பெட்டகத்தின் திறப்பைக் கேட்டு தாக்குதல் மேற்கொண்டதாக பணியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகாமையில் இராணுவ அதிரடிப்படையினரின் முகாம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .