2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

’விதாதா வள நிலையங்கள் அமைக்கப்படும்’

Editorial   / 2018 ஜூலை 04 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.வி.ஜிதா

 

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்களிலும் விதாதா வள நிலையங்கள் அமைக்கவுள்ளதாகத் தெரிவித்த விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சரத் அமுனுகம, இந்த நிலையங்களினுடாக இளைஞர், யுவதிகளுக்கு சர்வதேச ரீதியில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பல செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தும் முகமாக, அமைச்சர் சரத் அமுனுகமவுக்கும் மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் உட்பட பிரதேச செயலாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று (04) நடைபெற்றது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்ரைத்த அவர்,

மாவட்டத்தில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கான தொழில் கற்கைகளை ஆரம்பிக்கும் நோக்கத்தில், இங்குள்ள விதாதா வள நிலையங்களில் 8 மாணவர்களுக்கான வேலைவாய்ப்புப் பெறகூடிய கற்கை நெறிகள் நடாத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

அந்தப் பயிற்சி நிலையங்களில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், மேலும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பைப் பெற விதாதா வள நிலையங்களில் தொழில்பயிற்சிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளையே முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்த அவர், விதாதா வள நிலையத்தில் பயிற்சி பெரும் மாணவர்களுக்கு ஆங்கில மொழியைக் கட்டாயமாகப் படிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இவ்வாறான கற்கை நெறிகளைப் படிப்பவர்கள், தொழில்வாய்ப்பையும் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X