Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 02 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, கொடிகாமம் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கொடிகாமம் பகுதியில் இன்று (02) ஒலிபெருக்கி மூலம் பொலிஸார் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர்.
வீதியில் விபத்துகள் ஏற்படுவதற்கு சாரதிகளின் கவனக்குறைவே காரணமாகும். வாகனத்தை வேகமாக ஓட்டுதல், வீதி சமிக்ஞைகளைச் சரியான முறையில் கடைப்பிடிக்காமை, மோட்டார் சைக்கிள் ஓட்டும்போது தலைக்கவசம் அணியாமை மற்றும் தலைக்கவசம் இல்லாது ஏற்றிச் செல்லுதல் பிரதான வீதிகளில் நிறுத்திச் செல்லாமை, மதுபோதையில் வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட காரணிகளால் விபத்துகள் அதிகரித்துக் காணப்படுகின்றன.
எனவே, சாரதிகள் இதனைக் கருத்தில் கொண்டு சட்ட ஒழுங்குக்குகளுக்கமைய, வாகனங்களைச் செலுத்துதல் வேண்டும். தவறும், பட்சத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என, பொலிஸார் அறிவித்துள்ளனர்.
9 hours ago
29 Aug 2025
29 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
29 Aug 2025
29 Aug 2025