2025 ஜூலை 23, புதன்கிழமை

விபத்தில் அறுவர் காயம்

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 04 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என்.நிபோஜன்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பஸ், இன்று அதிகாலை 3.20 மணியளவில், கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்துக்கு முன்பாக விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட அறுவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாயைில் அனுமதிக்கப்பட்டதாக, கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பஸ்ஸானது,  கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்துக்கு முன்பாகவுள்ள கடைத்தொகுதி மற்றும் மின்சார மின்சாரக் கம்பத்தை உடைத்துக்கொண்டு வலயக்கல்வி அலுவலகத்தின் திட்டமிடல் அறையுக்குள் நுழைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தால், மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளமையால்  இப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது என தெரியவருகிறது.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .