எம். றொசாந்த் / 2018 ஏப்ரல் 17 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரவு உணவு வாங்குவதுக்காகச் சென்ற குடும்பஸ்தர் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
சுன்னாகம் பகுதியில் நேற்று (16) இரவு 8.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் மல்லாகத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான தர்மலிங்கம் ராமேஸ்வரன் (வயது 41) என்பவரே உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மல்லாகத்தில் உள்ள தமது வீட்டில் இருந்து இரவு உணவு வாங்குவதுக்காக சுன்னாகம் நோக்கி குறித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, பட்டா ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த ராமேஸ்வரனை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த போதிலும், அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாகம் பொலிஸார் பட்டா ரக வாகன சாரதியை கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
22 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago