2026 மார்ச் 23, திங்கட்கிழமை

விபத்தில் குடும்பஸ்தர் பலி

Editorial   / 2020 ஓகஸ்ட் 24 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

மணலுடன் சென்ற உழவு இயந்திரத்தின் மக்காட்டில் இருந்து பயணித்த குடும்பத்தலைவர் ஒருவர், தவறி வீழ்ந்து சில்லுக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து, சங்கானை - விழிசிட்டியில் நேற்று (23) பிற்பகல் இடம்பெற்றது.

சங்கானை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான உதயகுமார் சுரேஷ்குமார் (வயது 32) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரமொன்று வீதியைவிட்டு விலகி மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதன் போதே மக்காட்டில் இருந்து பயணித்தவர் தவறி சில்லுக்குள் விழுந்துந்துள்ளரென, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .