2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் முதியவர் பலி

Editorial   / 2019 மே 24 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

பருத்தித்துறை வீதியில் கோப்பாய் சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கோப்பாய் தெற்கை சேர்ந்த எஸ். செல்வராசா (வயது 63) என்பவரே உயிரிழந்தவராவார். 

கோப்பாய் சந்திக்கு அருகில் வீதியை கடக்க முற்பட்ட போதே, குறித்த விபத்து இடம்பெற்றது.

அதில் படுகாயமடைந்த முதியவரை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் உறுதி செய்துள்ளனர். 

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X