எம். றொசாந்த் / 2019 ஜனவரி 16 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்.போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட விபத்து சிகிச்சை பிரிவை எதிர்வரும் 7 ஆம் திகதி திறந்து வைப்பதுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் எஸ்.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
போதனா வைத்தியசாலையில் 600 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக விபத்து சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அதில் 100 கட்டில் வசதிகளுடன், 3 சத்திர சிகிச்சை கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
விபத்துக்களுக்கு உள்ளாவோர் நேரடியாகவே இந்த பிரிவுக்கு அனுமதிக்கப்பட்டு அங்கே அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, அவர்கள் குணமடைந்த பின்னர் அங்கிருந்தே வெளியேறக் கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த சிகிச்சைப் பிரிவினை எதிர்வரும் 7ஆம் திகதி மத்திய சுகாதார அமைச்சர் ராஜிதசேனாரட்னாவினால் திறந்து வைப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025