2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வியாபார நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

எம். றொசாந்த்   / 2019 ஏப்ரல் 25 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழில் பழைய இரும்புகள், பிளாஸ்ரிக் பொருட்களை சேகரித்து வந்தவர்களும் நடைபாதை வியாபாரங்களில் ஈடுபட்டவர்களும் தமது தொழில்களை இடைநிறுத்தியுள்ளனர்.

குடாநாட்டு வீதிகளில் காலை வேளைகளில் வாகனங்களில் ஒலிபெருக்கிகளை பொருத்தி “பழைய இரும்புகள், உடைந்த பிளாஸ்ரிக் பொருட்கள் வாங்கப்படும்" என தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் கடந்த 4 நாட்களாக தமது தொழில் நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளனர்.

அதேவேளை வீதியோரங்களில் நடைபாதை வியாபாரங்களில் ஈடுபடுவோரும், தமது வியாபர நடவடிக்கைகளை இடைநிறுத்தி வைத்துள்ளனர்.

குறித்த வியாபார, தொழில் நடவடிக்கைகளில் பெரும்பாலும் முஸ்லீம்களே ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X