Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். தில்லைநாதன்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கிலுள்ள மணற்காடு சவுக்கு மர தோப்பு விறகுக்காக அழிக்கப்படுவதாக 12 விறகு வியாபாரிகள் கடற்படையால் கைது செய்து பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சவுக்கு மர குற்றிகளை ஏற்றியவாறு இவர்களின் சைக்கிள்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்டவர்களை பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சவுக்கம் தோப்பு விசமிகளால் திட்டமிடப்பட்டு தீ வைத்து எரிப்பதும், அதனை வெட்டி விறகாக்குவதும் நடந்தேறிவருகிறது.
மணற்காடு மக்களால் இதனை சமுதாயத் தோப்பாக அறிவிக்குமாறு கோரி வரும் நிலையில், அரசு இந்தக் காட்டை வனவளத் திணைக்களத்தின் ஆளுகைக்குள் கொண்டுவர கடும் பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனாலும் மக்களின் கடும் எதிர்ப்பினால் முயற்சி கைவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சவுக்கு தோப்பு உரிய பராமரிப்பின்றி சமூக விரோதிகளால் திட்டமிடப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றது. (R)
1 hours ago
5 hours ago
24 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
24 Sep 2025