2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறு

Princiya Dixci   / 2020 நவம்பர் 29 , பி.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்ரமணியம் பாஸ்கரன், எஸ்.என் நிபோஜன்

கார்த்திகை விளக்கீட்டுக்கு, இராணுவம் இடையூறு ஏற்படுத்தியதுடன், மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் கார்த்கை விளக்கீட்டுக்காக தீபம் ஏற்றிய வயோதிபத் தம்பதியர், இராணுவத்தினரால் மிரட்டப்பட்டு, விளக்குகளும் தூக்கிவீச்சப்பட்டதாக சம்மந்தப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

வழமைபோல கார்த்திகை விளக்கீட்டுக்காக வீட்டு முற்றத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்த நிலையில், வீட்டு வளவின் உள்ளே வந்த இராணுவத்தினர், விளக்குகளைத் தூக்கிவீசியுள்ளனர்.

அதன் பின்னர் வயோதிபரை துப்பாக்கியால் தாக்க வந்தததாகவும் அவர் தெரிவித்தனர்.

பரந்தன் இராணுவ முகாமை சேர்ந்தவர்கள் இராணுவ சீருடையில் இவ்வாறு அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X