2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

‘விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து ஆராய வேண்டும்’

Editorial   / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந்

 

அரசியல் சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் எனும் அடிப்படையில் உணவும் சுதந்திரமாக இருக்க வேண்டுமெனத் தெரிவித்த வடக்குமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து தீவிரமாக ஆராய வேண்டுமெனவும் கூறினார்.

"காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு நஞ்சற்ற உணவு உற்பத்தியில் தன்னிறைவு நோக்கி" எனும் தொனிப்பொருளில், விவசாயத் திணைக்களம் நடத்தும் விவசாயக் கண்காட்சி, யாழ்ப்பாணம் - திருநெல்வேலியிலுள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில், இன்று (17) முற்பகல் 09.30 மணியளவில் ஆரம்பமானது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தரையாற்றிய அவர், மனிதன் இப்பொழுது விண்தொட்டிருக்கின்றான் ஆனால் மண்தொடாத மனிதன் எப்போதும் விண்தொட்டதில்லையென்றும் உணவு சுதந்திரமாகவிருக்கும் சமுதாயத்தால் தான் ஏனைய விடயங்கள் தொடர்பில் யோசிக்கும் சக்தியும் புத்தியும் ஏற்படுமெனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .