2025 மே 17, சனிக்கிழமை

வீடுகள் தாக்கப்பட்ட சம்பவம் : இருவர் கைது

எம். றொசாந்த்   / 2019 ஏப்ரல் 11 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மானிப்பாய் பகுதியில் உள்ள மூன்று வீடுகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்  இரண்டு பேர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஆனைக்கோட்டை பிடாரி அம்மன் கோவிலடியில் உள்ள வீடொன்றிலிருந்து இலக்கத்தகடுகளற்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைக்கோடரி மற்றும் வாள் என்பன மீட்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

மானிப்பாய் இந்துக் கல்லூரி வீதியிலுள்ள இரண்டு வீடுகள் உட்பட மூன்று வீடுகளுக்குள் நேற்று (10) புதன்கிழமை புகுந்த 9 பேர் கொண்ட கும்பல் அடாவடியில் ஈடுபட்டிருந்தது. இந்த தாக்குதல்களை ஆவா குழுவின் நடத்தினர் என்று  பொலிஸார் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் சம்பவம் இடம்பெற்று சில மணி நேரங்களில் கொக்குவில் பகுதியில் வைத்து இளைஞர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து ஆனைக்கோட்டை பிடாரி கோவிலடியிலுள்ள வீடொன்றிலிருந்து இலக்கத்தகடுகள் இல்லாத மோட்டார் சைக்கிள், கைக்கோடாரி மற்றும் வாள் என்பன மீட்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .